துணை சபாநாயகர் தலைமையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம்…

25 August 2020, 10:14 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் சட்டப்பேரவை துணை சபாநாயகருக்கு பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார்.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியை சார்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கேய ஒன்றிய கழகம் சார்பில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டு முக கவசங்கள் அணிந்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை வகிக்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உத்தரவுப்படி இளம்பெண்கள் பாசறை அமைப்பது தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிதாக நிர்வாகிகளாக வரஇருப்பவர்களை நேரிடையாக சந்தித்து தகுதியானவர்களை தேர்வு செய்துள்ளோம். எதிர்காலத்தில் சிறப்பாக பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற்றுத்தருவார்கள் என நம்பிக்கை உள்ளது என்றார் . மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்டதாரிகள் மற்றும் திறமையானவர்கள் அதிகம் உள்ளனர் எனவும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் காங்கேயம் முன்னல் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ்.உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Views: - 28

0

0