அரசு பேருந்து நடத்துனர் பணியின்போது மரணம்:பயணிகள் அச்சம்…
Author: kavin kumar28 August 2021, 7:31 pm
திருப்பூர்: கும்பகோணத்தில் இருந்து திருப்பூர் நோக்கிவந்த அரசு பேருந்து நடத்துனர் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் நெஞ்சுவலியால் மரணம் . பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர். காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவருடைய சொந்த ஊருக்கு சடலத்தை எடுத்து சென்ற குடும்பத்தினர்.
கும்பகோணம் பணிமனை 2யில் இருந்து ஓட்டுநர் கலாநிதி மற்றும் நடத்துனர் விஜயகுமார் ஆகியோர் பேருந்து எடுத்துக்கொண்டு கும்பகோணம் , மயிலாடுதுறை,தஞ்சாவூர்,திருச்சி,கரூர்,காங்கேயம் ,திருப்பூர் நோக்கி பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளகோவிலை அடுத்து உள்ள ஓலப்பாளையம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது நடத்துனர் அவரின் இருக்கையில் இருந்து சாய்வதை கண்ட ஓட்டுநர் கலாநிதி பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகளின் உதவியுடன் விஜயகுமாரை எழுப்பியுள்ளார் , அவர் எழவில்லை பின்னர் அதே பேருந்தில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தார்.
அங்கு நடத்துனர் விஜயகுமாரை பரிசோதித்த மறுத்தவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பின்னர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் விஜயகுமாரின் உடல் அவரின் சொந்த ஊருக்கு குடும்பத்தினரும் உறவினர்களும் எடுத்துச்சென்றனர்.மேலும் இறந்து போன விஜயகுமாருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகளும் ,5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நடத்துனர் பணியில் இருக்கும் போதே இறந்தது உடன்பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு துக்கத்தை ஏற்படுத்தியது.
0
0