சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்டவீரர்களுக்கு மரியாதை: இந்துமுன்னணியினர் காரில் ஊர்வலம்

Author: kavin kumar
15 August 2021, 3:31 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து இந்து முன்னணியினர் காரில் ஊர்வலமாக தீரன் சின்னமலையின் நினைவிடமான ஓடாநிலைக்கு செல்கின்றனர் . சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்டவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 50க்கும் மேற்பட்ட காரில் செல்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து இந்து முன்னணியினர் காரில் ஊர்வலமாக தீரன் சின்னமலையின் நினைவிடமான ஓடாநிலைக்கு செல்கின்றனர் . 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்டவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த அந்த பகுதிகளில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இன்று இந்துமுன்னணி மற்றும் அதன் தோழமை இயக்கங்கள் ஒன்றிணைந்து சுதந்திர தினத்தை கொடாடப்படும் என இந்து முன்னணியின் மாநில பொறுப்பாளர்கள் அறிவித்திருந்த வேளையில் இன்று காங்கேயம் பகுதியில் வாழ்ந்த சுதந்திர போராட்ட மாவீரன் தீரன் சின்னமலையின் மணிமண்டபம் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ளது.

அதற்க்கு 200க்கும் மேற்பட்ட இந்து பொறுப்பாளர்களுடன் 50க்கும் மேற்பட்ட கற்களில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தை இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் கொடியசைத்து துவக்கிவைத்தார். கொட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் தமிழ்செல்வன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மேலும் காங்கேயம் பேருந்து நிலையம் முன்பு குழந்தைகளின் சிலம் பாட்டமும் நடைபெற்றது.

Views: - 580

0

0