ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

4 July 2021, 11:44 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் அருகே உள்ள சாவடிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களிடம் கொரோனா தடுப்பு குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

திருப்பூர் மாவட்டம்காங்கேயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள் .அப்போது மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பணிபுரியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த நிகழ்வின்போது NMCT மற்றும் என்பீல்ட் தனியார் அமைப்பின் மூலம் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான மருத்துவ மற்றும் உபகரணங்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனியார் அமைப்பினர் அமைச்சர் சாமிநாதன் இடம் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர்.மேலும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 12 மருத்துவமணைகளுக்கு இதுபோன்ற சேவைகளை செய்வதாகவும் தெரிவித்ததனர்.

Views: - 221

0

0