குப்பையை பிரிக்கும் போது கை துண்டான தூய்மைப் பணியாளருக்கு நிதி உதவி வழங்கி கனிமொழி

3 November 2020, 6:51 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் குப்பையின் மறுபக்கம் குறும்படத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி வெளியிட்டு, குப்பையை பிரிக்கும் போது கை துண்டான தூய்மைப் பணியாளர் பாக்கியலட்சுமிக்கு நிதி உதவி வழங்கினார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றிய பாக்கியலட்சுமி என்பவர் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பாக குப்பைகளை தரம் பிரித்து போது இயந்திரத்தில் சிக்கி அவரின் கை துண்டானது. இந்த சம்பவம் குறித்த குப்பையில் மறுபக்கம் என்ற தலைப்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப் பட்டது. இந்த குறும்படம் வெளியீட்டு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு குறும்படத்தை வெளியிட்டார். இதைதொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி கை துண்டான பாக்கியலட்சுமிக்கு கனிமொழி எம்பி இரண்டு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

Views: - 11

0

0