கன்னியாகுமரி கஞ்சா இல்லாத மாவட்டமாக விரைவில் மாற்றப்படும்; மண்டல ஐ. ஜி. முருகன் பேட்டி

22 January 2021, 6:27 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கஞ்சா இல்லாத மாவட்டமாக விரைவில் மாற்றப்படும் என மண்டல ஐ. ஜி. முருகன் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகிலுள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளையில், கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரி ஆலோசனை கூட்டத்தை மதுரை மண்டல ஐ.ஜி. முருகன் தூக்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;- தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் புதிதாக காவலர் விழிப்புணர்வு திட்டம் என்ற திட்டத்தை காவல்துறை சார்பில் துவங்கி வருகிறோம்.

இந்தத் திட்டத்தின்படி ஒரு தாய் கிராமம் உருவாக்கப்பட்டு அதனுடன் பல குக்கிராமங்கள் இணைக்கப்படும். ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்படுவார். அந்த காவல் அதிகாரியின் பெயரில் ஒரு வாட்ஸ் அப் குரூப் அமைக்கப் பட்டிருக்கும். அந்த வாட்ஸ்அப் குரூப் மூலம் பொதுமக்கள் தங்களது ஊரில் உள்ள சிறிய குறைபாடுகள், வெளியில் சொல்ல முடியாத குறைபாடுகளையும் வாட்ஸ் அப் மூலம் காவல் குறிப்பிட்ட காவல் அதிகாரிக்கு தெரிவிக்கலாம்.

மேலும் பெண்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவிக்க விரும்புவது இல்லை. எனவே அவர்களும் இந்த வாட்ஸ்அப் குரூப்பில் புகார் செய்யலாம். தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த திட்டத்தை துவக்கி செயல்படுத்தி வருகிறோம். மாநிலத்தின் தென்பகுதியில் முதன்முதலில் இந்த கிராமத்தில் துவக்கி இருக்கிறோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது. கஞ்சா விற்பனை செய்வோர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எனினும் அந்த விற்பனை குறையவில்லை. எனவே இப்போது நாங்கள் நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல கஞ்சா விற்பனை செய்பவரை மட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0