ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் விஷேச பூஜைகள்…
14 August 2020, 8:47 pmகரூர்: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூரில் உள்ள ஸ்ரீ தேவி பகவதி அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேச பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.
கரூர் நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள பாரதியார் தெருவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு வளையல்களால் மூலவர் தேவி பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
மேலும், இதே போல, கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் பின்புறம் உள்ள பசுபதிபுரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் மூலவர் அம்மனுக்கு பாலதிரிபுரசுந்தரி அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் பெண் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.