முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி அறிவிப்பு – அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

Author: Udayaraman
7 October 2020, 5:16 pm
Quick Share

கருர்: கரூரில், முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை அடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அதிமுகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலை முன் புறம் அதிமுகவினர் ஒன்று கூடினர். அங்கு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்ததை அடுத்து கரூர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் காளியப்பன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல வெங்கமேடு பகுதியில் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 42

0

0