பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண்மை மாணவர்கள்

30 September 2020, 10:49 pm
Quick Share

கரூர்: கரூரில் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் பெண் விவசாயிகளுக்கு வேளாண்மை மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அடுத்த வடுகபட்டியில் இயற்கை வேளாண் விவசாயம் மேற்கொண்டு வரும் கிருஷ்ணவேணி என்பவர் தோட்டத்தில் இன்று செய்முறை பயிற்சி நடைபெற்றது. இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் எளிய முறையும், அதனால் ஏற்படும் நன்மை குறித்து விவசாய கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்க்கானிக் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செய்முறை விளக்கம் விவசாயிகள் மத்தியில் செய்து காட்டினர்.

செயற்கை முறையில் தயாரிக்கப்படும் இரசாயன உரங்கள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களின் பாதிப்பும், அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், இரசாயன உரங்களினால் மண்ணின் தன்மை மாறி மலட்டுத் தன்மையாக மாறி மண்ணை பாழ்படுத்துவது பற்றி விவசாயிகள் மத்தியில் விளக்கமளித்தனர். இயற்கையாக பூச்சி விரட்டியடிக்கும் பஞ்ச காவியம் தயாரிப்பது, அதிக மகசூல் கிடைக்க என்ன செய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தில் மகசூல் அதிகம் கிடைப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

Views: - 10

0

0