கரூர் மாவட்டத்தில் 146 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

24 September 2020, 7:57 pm
Quick Share

கரூர்: கரூர் மாவட்டத்தில் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திலேயே பொருட்கள் வழங்கும் வகையில் ‘அம்மா நகரும் நியாயவிலைக்கடை” வாகனத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் பஞ்சமாதேவியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள சங்கராம்பாளையத்தில் வசிக்கும் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திலேயே பொருட்கள் வழங்கும் வகையில் ‘அம்மா நகரும் நியாயவிலைக்கடை” வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள 384 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 203 பகுதிநேர நியாயவிலைக்கடைகளில் 3,10,253 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இதில் பல பகுதிகளில் மக்கள் நீண்ட தூரம் சென்று அத்தியாவசியப் பொருட்கள் பெறவேண்டிய சூழ்நிலை உள்ளதை கருத்தில் கொண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 143 வாகனங்களிலும் கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் 2 வாகனங்களிலும் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் 1 வாகனத்திலும் என மொத்தம் 146 ‘அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள்” செயல்படவுள்ளது. இந்த 146 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் மூலம்17,341 குடும்ப அட்டைதாரர்கள் வசிப்பிடத்தின் அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடையுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 10

0

0