ஆண்களுக்கான கையுந்து பந்து போட்டியை துவக்கி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

19 December 2020, 3:27 pm
Quick Share

கரூர்: கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் அம்மா டிராபி ஆண்களுக்கான கையுந்து பந்து போட்டியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

கரூரில் உள்ள பிரேம் மஹால் எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் ஆண்களுக்கான அம்மா டிராபி கையுந்து பந்து போட்டி இன்று மற்றும் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இப் போட்டியானது கரூர் மாவட்டத்தில் உள்ள 84 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில் இப் போட்டியானது இன்று துவங்கப்பட்டுள்ளது. இதில் முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 37 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 25,000 ரூபாய், நான்காம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வெற்றிபெறும் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.

Views: - 1

0

0