திமுகவினரை கைது செய்யக்கோரி பாஜகவினர் சாலை மறியல்
21 November 2020, 4:22 pmகரூர்: கரூரில் கோ பேக் மோடி என்று சுவர்களில் எழுதிய திமுகவினரை கைது செய்யக்கோரி வெங்கமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட பாஜகவினர் 5 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தமிழகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர், பாஜகவின் திட்டங்களையும் கொள்கைகளையும் எதிர்த்து சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். அதில் கோ பேக் மோடி என்று எழுதிவைத்துள்ளனர். இதனை உடனடியாக அளிக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அரவக்குறிச்சி நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சுவர் விளம்பரங்களை வருகிற 25-ஆம் தேதிக்குள் அளிக்காவிட்டால் திமுகவையும்,
செந்தில்பாலாஜியையும் விமர்சித்து நாங்களும் பதிலுக்கு சுவர் விளம்பரம் எழுதுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் வெங்கமேடு மேம்பாலம் அருகில் பாஜக மாவட்ட நிர்வாகி கணேசமூர்த்தி தலைமையில் சுமார் 40-பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகச் சொல்லி போலீசார் வற்புறுத்தியும், அவர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வெங்கமேடு போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் கரூர் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0
0