மாவட்ட அளவிலான பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

25 August 2020, 9:59 pm
Quick Share

கரூர்: கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கரூர் அடுத்த வடிவேல் நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் கரூர் மாவட்ட அளவிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் கே.சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கரூர் மாவட்ட பார்வையாளரும், மாநில இணை பொருளாளருமான டாக்டர் எம்.சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி பின்பு கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வர இருக்கும் 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியும், கூட்டணி கட்சியினரும் பெருவாரியான வித்யாசத்தில் வெற்றி பெறச்செய்து தமிழகத்தில் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் தாமரை மலர செய்ய வேண்டுமென்றும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில்., நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Views: - 26

0

0