வளர்ப்பு கோழிக்கு இன்று முதல் கிலோ 12 ரூபாய் தர வேண்டும்: கறி கோழி பண்ணையாளர்கள் நலச் சங்கத்தினர் போராட்டம்

3 November 2020, 8:17 pm
Quick Share

கரூர்: கரூர் மாவட்டத்தில் கறி கோழி பண்ணையாளர்கள் நலச் சங்கத்தினர் வளர்ப்பு கோழிக்கு இன்று முதல் கிலோ 12 ரூபாய் தர வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணையாளர்கள் உள்ளனர். கறி கோழி நிறுவனங்களிடமிருந்து கோழி குஞ்சுகளை வாங்கி 40 நாட்கள் வளர்த்து அவற்றை நிறுவனங்களில் விற்கும் போது 1 கிலோ கறி கோழிக்கு 4 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கின்றனர். இதனால் தங்கள் கோழிப் பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், அவற்றை 12 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்து தென் தமிழக கறி கோழி பண்ணையாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கரூர் மாவட்டம் பரமத்தியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் கரூர் மாவட்ட கறிக் கோழிப் பண்ணையாளர்கள் நலச் சங்கம் என்ற அமைப்பினை கோழிப் பண்ணையாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக முடிகணத்தை சார்ந்த குணசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குணசேகரன்,

இன்று முதல் அண்டை மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குக் விதமாக இன்று முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள 200 கறிக் கோழிப் பண்ணையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், கறிக்கோழிகளை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதும் இல்லை, கோழிக் குஞ்சுகளை வாங்குவதும் இல்லை என முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், 1 கிலோ கறி கோழி 12 ரூபாய் தரும் வரை போராட்டம் தொடரும் என்றும், போராட்டம் காரணமாக கறிக் கோழியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழக அரசு கறிக்கோழி பண்ணையாளர்கள், கோழி நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Views: - 21

0

0