தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சிகாலம் கூட்டுறவுத்துறையின் பொற்காலம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

4 November 2020, 8:27 pm
Quick Share

கரூர்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்று வரும் இந்த ஆட்சிகாலம் கூட்டுறவுத்துறையின் பொற்காலம் என கரூரில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் செயல்பட்டுவந்த கூட்டுறவு வங்கியின் கிளைக்கான புதிய கட்டடத்தை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:- கிராமப்புறங்களின் பொருளாதாரத்திற்கு முக்கிய அங்கமாக விளங்குவது கூட்டுறவு.

கூட்டுறவே நாட்டுயர்வு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் ஊக்கப்படுத்தி அனைத்து கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி, கூட்டுறவு வங்கிகளை கணினி மயமாக்கி விவசாயிகளுக்கு போதுமான கடனுதவிகளை வழங்கி வந்தார்கள்.ஜெயலலிதா அவர்களின் ஆட்சியே கூட்டுறவுத்துறைக்கு பொற்காலம் என்று சொல்லத்தக்க வகையில் திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

அம்மா ஜெயலலிதா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜெயலலிதா அவர்கள் செயல்படுத்தி அனைத்து திட்டங்களையும் சீறும் சிறப்புமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி என்பது திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான வங்கி என்றும், கூட்டுறவுத்துறையின் மூலம் மத்தியகால கடனுதவி சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான கடனுதவி, விவசாயிகளுக்கு பயிர்க்கடனுதவி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நமது வாழ்வின் அடிப்படை நாதமாக விளங்கும் விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடியினை பயிர்க்கடனாக வழங்கியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் தகுதியுடைய அனைவருக்கும் கடனுதவிகள் வழங்கப்படுகின்றது. வெள்ளத்தால், பெருமழையால், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்துள்ளார்கள். ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்த அரசு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு என்றார்.

Views: - 16

0

0