கர்ப்பிணி பெண்களுக்கு மாஸ்க்குகளை கொடுக்க மறந்த மாவட்ட நிர்வாகம்:காற்றில் பறக்கவிட்ட சமூக இடைவெளிகள்

Author: Udhayakumar Raman
16 September 2021, 7:54 pm
Quick Share

கரூர்: கரூரில் அரசு சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ சிவகாமி சுந்தரி உள்பட மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணியினர் மாஸ்க் போட மறந்து மட்டுமல்லாது சமூக இடைவெளிகளை காற்றில் பறக்கவிட்டனர்.

கரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கரூர் கோவை ரோட்டில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொள்வதாக இருந்த நிலையில், அவரது வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அவரது வருகை ரத்து என்று தெரிந்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அவர் வருகை தரவில்லை என்று கூறி நிகழ்ச்சியை தொடக்கி பேசினார். முன்னதாக கர்ப்பிணி பெண்கள் சுமார் 200 நபர்கள் மற்றும் திமுக கட்சியினர் சுமார் 500 நபர்கள் என்று அரங்கமே கூட்ட நெரிசலில் இருந்த நிலையில்,

அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கும், கூட்டத்தினருக்கும் மாஸ்க் தரவில்லை, கூட்ட நெரிசலில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. அரசு நிகழ்ச்சியில் அதுவும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி சுந்தரி மற்றும் திமுக மகளிரணியினர் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் யாரும் மாஸ்க் போடவில்லை, பின்னர் செய்தியாளர்கள் கேமிரா எடுத்தவுடன், சுதாகரித்து கொண்ட திமுக மகளிரணியினரும், திமுக பெண் எம்.எல்.ஏ வும் மாஸ்க் அணிந்தனர். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு திட்டத்தினையும் எடுத்துரைத்ததோடு, தமிழக அளவில் 18 வயதிற்குட்பட்ட அளவில் குழந்தை திருமணம் நடைபெறும் மாவட்டங்களில் நமது கரூர் மாவட்டம் தான் இடம் பிடித்திருப்பதனையும் ஒத்துக் கொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடிவில், நாட்டுப்பண் பாடும் போது பாதியில் கர்ப்பிணி பெண்களை தவிர மற்ற அனைவரும் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் சாப்பாட்டுக்கு முந்தியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Views: - 133

0

0