பி.சி.ஆர் பரிசோதனை மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

12 August 2020, 11:23 pm
Quick Share

கரூர்: கருரில் கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை மையத்தினை மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தத்தை போக்கும் வகையில் செய்தித்தாள் வாசித்தல், சதுரங்க விளையாட்டு போன்றவை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மையத்தினை திடீர் ஆய்வு செய்தார்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசால் அனுமதியளிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் பரிசோதனை மையத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் திடீர் ஆய்வு செய்தார். கரூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் வரப்பிரசாதமாக கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விளங்கிவருகின்றது.

இந்த பரிசோதனை மையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 350 முதல் 400 மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றது. கரூர் மட்டுமல்லாது திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வரும் மாதிரிகளும் பரிசோதிக்கப்படுகின்றது.

மாதிரி முடிவுகளின் அடிப்படையில் தொற்றுக்கான அறிகுறிகளுடன் தொற்று பாதிப்பு உள்ள நபர்களை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் தொற்று பாதிப்பு உள்ள நபர்களை அரசுமருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சைப்பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இதுமட்டுமில்லாமல், நோயாளிகளிடம் மன அழுத்தம் இருக்க கூடாது என்பதற்காக, அவர்களுக்கிடையே செஸ் (சதுரங்க விளையாட்டு) போட்டி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியாகவும் விளையாடி வருகின்றனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குள் இருக்கும் குற்ற உணர்வை மறந்து மகிழ்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 35

0

0