நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

2 November 2020, 10:00 pm
Quick Share

கருர்: நீட் தேர்வில் கரூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 11 மாணவ, மாணவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசு கொடுத்து பாராட்டினார்.

கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டத்தில் 2 மாணவர்கள், 9 மாணவிகள் 113 மதிபெண்கள் பெற்று தேர்வாகியுள்ளனர். இதில் பேர் அரசு பள்ளியிலும், 2 பேர் அரசு உதவி பெறும் பள்ளியிலும் கல்வி பயின்றவர்கள்.

இவர்களை கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன் வரவழைத்தனர். மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகள் கொடுத்து மாணவ, மாணவிகளை பாராட்டினார். தமிழக அரசின் சீரிய முயற்சியால் இந்த உள் ஒதுக்கீடு பெறப்பட்டதாகவும், அனைவரும் நன்கு படித்து மருத்துவராகும் படி வாழ்த்தினார்.

Views: - 14

0

0