பொது மக்களுக்கு நம்பிக்கை, தைரியம் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை – கரூரில் போலீசார் நடத்திய பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு பேரணி

19 November 2020, 7:37 pm
Quick Share

கரூர் மாவட்ட போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் விதமாகவும் குற்றவாளிகளை எச்சரிக்கை விதமாகவும் மேலும் குற்றங்கள் நடக்கும் விதமாகவும் கரூர் நகரில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின்பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பெண் காவலர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பேரணி கரூர் பேருந்து நிலையம் மனோகரா கார்னரில் இருந்து ஜவகர் பஜார் திண்டுக்கல் சாலை வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்தது. அப்போது பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்,

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களுக்கு ரவுடி சேர்த்திருக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கோ இங்கு இடம் இல்லை மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை காவல்துறை கடுமையாக எச்சரிக்கிறது என்றார்.

Views: - 16

0

0