தனியார் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க நகையை திருப்பி வாங்கும்போது போலி: கூலித்தொழிலாளி போலீசில் புகார்

21 August 2020, 11:03 pm
Quick Share

கரூர்: கரூரில் தனியார் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க நகையை திருப்பி வாங்கும்போது போலி நகை என தெரிந்ததால் அதிர்ச்சியடைய கூலித்தொழிலாளி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 40 கரூரில் உள்ள ஒரு தற்செயல் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவர் தனது குடும்ப செலவிற்காக மனைவியின் 20 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்களை கோவை ரோட்டில் உள்ள முத்தூட் பைனான்ஸ் கார் என்கின்ற தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அடகு வைத்துள்ள நகையை தங்க நகையை உடனடியாக திருப்பிக்கொள்ள வேண்டும் என்று அந்த தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து இவர் சரவணனுக்கு தொலைபேசியில் கூறியுள்ளனர்.

அதற்கு அவர் தன்னிடம் பணமில்லை என்று கூறி, எதுவும் நான் கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் நிதி நிறுவனத்தில் வரவு செலவு வைத்துள்ளேன் உடனடியாக திருப்பும்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த தனியார் நிதி நிறுவனம் மணப்புரம் என்கின்ற தனியார் நிதி நிறுவனத்திடம் மூலம் பணம் பெற்று எங்கள் நகையைத் திருப்பிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி மணப்புரம் நிதி நிறுவனத்தினர் முத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் இடம் பணம் 72,000 செலுத்தி தங்க நகையை திருப்பி வாங்கும் பொழுது அது போலி நகை என்று தெரிந்தது.

அப்போது சரவணன் இது என்னுடைய நகை அல்ல நான் கொடுத்த தங்க நகை போலவே இது டூப்ளிகேட்டா செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து சரவணன் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர போலீசார் 2 தனியார் நிறுவனம் மற்றும் சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்திடம் தங்க நகையை அடகு வைக்கும் பொழுது அது எப்படி திருப்பும் பொழுது பலியானதாக மாறும் என்று வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 34

0

0