நல்லவர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்துவேன்: கரூரில் டிராபிக் ராமசாமி அதிரடி பேட்டி

By: Udayaraman
12 October 2020, 11:41 pm
Quick Share

கரூர்: நோட்டாவிற்கு 33 சதவிகிதம் வாக்களித்தால் தேர்தல் செல்லாது என கரூரில் புதிய தேர்தல் விதியை எடுத்து வைத்த டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

‘நல்லாட்சி இயக்கம்’ சார்பில், ஒரு கோடி வாக்காளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி, கோவையில் நடைபெற்றதையடுத்து கரூர் வழியாக சென்னை சென்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கரூர் பகுதியிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:- நல்லவர்களை தேர்ந்தெடுத்து கட்சி பாகுபடின்றி ஜெயிக்க வைக்க களம் காண தான் உள்ளதாகவும், நோட்டா சின்னத்திற்கு 33 சதவிகிதம் மக்கள் வாக்குகள் அளித்தால் அந்த தேர்தல் ரத்து ஆகும் என்று சட்டம் இருக்கின்றது. அதாவது ஒரு லட்சம் வாக்குகள் வாக்குகளில் 33 ஆயிரம் வாக்குகள் பதிவாகி இருந்தால் தேர்தல் நிறுத்தப்படும்,

தேர்தல் செல்லாது இது தான் விதி, என்னை பிடிக்காமல் இருந்தாலும் நோட்டாவிற்கு போடுங்கள் என்றார். இது போல எல்லா இடத்திலும் போட்டால் மட்டுமே எல்லா அரசியல் வாதிகளும் திருந்துவார்கள் என்றார். ஏற்கனவே கோவையிலும், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நல்லாட்சி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஆரம்பித்துள்ளதாகவும், விரைவில் கரூரிலும் விழிப்புணர்வு ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் என் உயிர் உள்ளவரை நான் இந்த நல்லாட்சி இயக்கத்திற்காகவும், தற்போது எனக்கு வயது 87 ஆகும் என்றும்,

நான் 120 வயது வரை வாழ்வேன் என்று நம்பிக்கை உள்ளது அதுவரை போராடுவேன் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா என்கின்ற வியாதியே கிடையாது,. கொள்ளையடிக்கின்ற வியாதி தான் என்றும் காய்ச்சல் என்றால் சிகிச்சை அளிக்கின்றார்கள். மேலும், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேசத்துரோகிகள் என்றார். கொரோனாவினை வைத்து தனியார் மருத்துவமனைகளும், அரசும் கொள்ளையடிப்பது தான். பணக்காரர்களுக்கு கொரோனா என்றால்,

அவர்களுக்கு வரும் போது கொரோனா பாசிட்டிவ் ஆனால் அவர்கள் இறந்தால் நெகட்டிவ் ஆகின்றது. என்றும் அவர்களது வீட்டிற்கு உடல் எடுத்து செல்லப்படுகின்றது. ஆனால், ஏழைகளுக்கு கொரோனா வந்து இறந்தால், அவர்களை மட்டும் மூட்டை கட்டி பிணத்தினை புதைக்கின்றனர் என்றும் ஐயம் எழுப்பினார். அது தெய்வத்திற்கு மட்டும் தான் தெரியும், கொரோனாவினை வைத்தும் கூட அரசியல் செய்கின்றனர். நீதிமன்றம் ஜனவரிக்குள் நல்ல முடிவினை எடுக்கும், ஒவ்வொன்றிற்கும் நீதிமன்றம் எல்லாம் செல்வார்களா ? என்றும் வரும் ஜனவரி மாதத்திற்குள் நீதிமன்றம் ஒரு நல்ல முடிவினை எடுக்கும், 140 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்த இந்த காவி ஆட்சி களைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்றார்.

Views: - 40

0

0