1783ம் ஆண்டு போரின் போது நிறுவப்பட்ட கரூர் போர் நினைவுத் தூண் திறப்பு

25 October 2020, 8:29 pm
Quick Share

கருர்: கரூரில் 1783ம் ஆண்டு போரின் போது நிறுவப்பட்ட கரூர் போர் நினைவுத் தூண் புரனமைக்கப்பட்டதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் 1780 முதல் 1784 வரை திப்பு சுல்தான் ஆளுகைக்கு உட்பட்ட கரூர் கோட்டையை கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள் 1783ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரூர் மீது போர் தொடுத்தனர். போரின் இறுதியில் கரூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. இதனை நினைவு கூறும் வகையிலும், இறந்து போன வீரர்களின் நினைவாகவும் அமராவதி ஆற்றின் தென்கரையில் தாந்தோன்றிமலை அருகில் ராயனூர் பகுதியில் போர் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.

அவை பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்தது. இதனை ரோட்டரி சங்கத்தினர் தனியார் நிறுவன பங்களிப்புடன் புரணமைத்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்பு அவற்றை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 11

0

0