இளநீர் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: மேலும் 3 பேர் கைது

22 September 2020, 8:34 pm
Quick Share

கரூர்: கரூரில் இளநீர் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே சிவகங்கையில் மூன்று பேர் சரண் அடைந்த நிலையில் இன்று 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

கரூர் கோயம்புத்தூர் சாலை எதிரில் இளநீர் கடை நடத்தி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது (25) கடந்த 18ஆம் தேதி இவர் கடையைத் திறந்து வியாபாரம் செய்ய இளநீரை எடுத்துவைத்து கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணமூர்த்தியின் தலை, கழுத்து, உடல், கை, கால் ஆகிய பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி கீழே சரிந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்த இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நேற்று அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல், துரைபாண்டி, மணி ஆகிய மூன்று பேர் சரண் அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் இன்று கரூர் நகர போலீசார் தமிழரசன், அஜித், கலையரசன் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து,அரவாக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சசிகலா முன்பு ஆஜர் செய்தனர். நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Views: - 29

0

0