கதர்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

14 September 2020, 7:50 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் போனஸ் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அரசு சார்பு நிறுவனமான கதர்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு சார்பு நிறுவனமான கதர் கிராம தொழில் வாரியத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளாக வழங்க வேண்டிய போனாஸ் தொகையும், இதுவரை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Views: - 3

0

0