கிரிவலம் சென்ற காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது: கோவையில் இந்துமுன்னணி சாலை மறியல் போராட்டம்

28 January 2021, 10:24 pm
Quick Share

கோவை: கிரிவலம் சென்ற இந்து முன்னணியின் உடைய மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் இந்துமுன்னணி சார்பில் காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் நீதிமன்ற உத்தரவின்படி கிரிவலம் சென்ற இந்து முன்னணியின் உடைய மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கோவை இந்து முன்னணி சார்பாக தசரதன் தலைமையில் இன்று மாலை காந்திபுரம் பகுதியில் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் கிரிவலத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது அதன் பிறகும் முஸ்லீம் அமைப்புகள் புகாரை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஊர்வலத்தை நடத்த முயன்ற இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்ரா சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்து முன்னணி வீரர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடப்பதாகவும் நீதிமன்ற உத்தரவு இருந்தும் மாநில தலைவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது எனவும் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து எங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். மாவட்ட தலைவர் K.தசரதன் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் முன்னிலை வகித்தார்.கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.குணா சிறப்புரையாற்றினார்.மாவட்ட நகர ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Views: - 0

0

0