மூணாறு நிலச்சரிவில் ஸ்ரீவில்லிப்புத்தூரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு: குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை…

9 August 2020, 9:48 pm
Quick Share

விருதுநகர்: மூணாறு நிலச்சரிவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி கடந்த சில தினங்களாக கனமழை பெய்து பல்வேறு போதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கன மலையின் காரணமாக மூணாறு ராஜமலை உள்ள பெட்டிமுடி என்ற இடத்தில் டாடா கண்ணன்தேவன் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர் தங்கியிருந்த குடியிருப்பின் மீது வெள்ளி இரவு 11மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த குடியிருப்பில் 40 குடும்பத்தை சேர்ந்த 93 பேர் தங்கியுள்ளனர்.இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் .கடந்த ஐந்து நாட்களாக ப்பகுதியில் மழை பெய்வதால் தொழிலாளர்கள் வீட்டிலேயே மூடங்கியிருந்தனர்.

மழை காரணமாக நான்கு நாட்களாக இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் இவர்கள் யாரிமும் தொடர்பு கொள்ள முடியவில்லை.முதலிம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூணாறு பெரியார் வர தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றதால் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்ல முடியவில்லை .பின் தற்காலிக பாலம் சரி செய்யப்பட்டு தற்பொழு வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடம் மீட்பு பணி இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மண்சரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராசையா, சரோஜா(எ) மகாலட்சுமி, ஜோஸ்வார, அருண்மகேஸ்வரன், அண்ணாத்துரை, மரியபுஷ்பம் என 6 பேர் இறந்ததை அடுத்து இறந்த உறவினர்களின் உடல்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இறந்தவரின் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்ந்து இறந்த உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தொழிலாளர்களின் உறவினர்களுக்கு கேரள அரசு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் அலைக்களிப்பதாகவும், குறிப்பாக அவர்கள் குடிநீர் மற்றும் உணவுக்கு திண்டாடுவதால் தமிழகத்திலிருந்து சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் உறவினர்களுக்கு உரிய பாதுகாப்பும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.