கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய 155வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!!
Author: kavin kumar1 August 2021, 2:05 pm
திண்டுக்கல் : சலேத் அன்னை ஆலயத்தில் திரு கொடியேற்ற சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இந்த பூஜைக்கு கொடைக்கானல் வட்டார அதிபரும் பங்கு தந்தையுமான எட்வின் சகாயராஜ் தலைமை தாங்கினார்.
பெருமாள் மலை பங்குத்தந்தை அருட்தந்தை பிரிட்டோ பாக்கியராஜ் சிறப்பு மறையுரையாற்றினார். இதன் பின்னர் அன்னையின் திருக்கொடியை வட்டார அதிபர் அருட்தந்தை எட்வின் சகாயராஜ், பெருமாள் மலை பங்குத்தந்தை பிரிட்டோ பாக்கியராஜ் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
இந்த கொடியேற்று விழாவில் கிறிஸ்தவர்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை படி கலந்து கொண்டனர். இதையடுத்து ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து முப்பது மணிக்கு சலேத் அன்னை ஆலயத்தில் நவநாள் திருப்பலி பூஜைகள் நடைபெறும்.
வரும் 14, 15 ஆகிய இரு நாட்களும் அன்னையின் 15 5 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற உள்ளன. இரண்டு நாட்களும் அன்னையின் சப்பர பவனி நடைபெறாது. வட்டார அதிபர் அருட்தந்தை எட்வின் சகாயராஜா கூறியதாவது, தற்போது தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இதன்படி வரும் 14 15ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் அமைதியான முறையில் திருப்பலி பூஜைகள் மட்டுமே நடைபெறும் ஆடம்பர சப்பரபவனி எதுவும் நடைபெறாது இவ்வாறு அவர் கூறினார்.
0
0