கொடியேற்றத்துடன் தொடங்கியது கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் உற்சாகம்..!!

Author: Aarthi Sivakumar
10 March 2021, 9:10 am
kkumari temple - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .

தென் தமிழகத்தின் முக்கிய திருவிழாவான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி பரணி தூக்க திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேளதாளம் முழங்க அம்மன் மூலக் கோவிலில் இருந்து எழுந்தருளி சிங்காரிமேளம், பஞ்சவாத்தியங்கள், பெண்கள் முத்து கொடை ஏந்தி கண்ணனாகம் சந்திப்பு வழியாக திருவிழா கோவிலை வந்தடைந்தது வழிநெடுகிலும் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

தொடர்ந்து வாணவேடிக்கை வெடி முழக்கத்துடன் முழங்க பெண்கள் குலைவியிட கோவில் தந்திரி பிரம்ம ஸ்ரீ ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து தூக்கத் திருவிழா துவக்க நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான இரண்டு வில் பூட்டிய தேரில் கோயிலை விட உயரமாக கோயிலை சுற்றி வரும் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வருகிற 18ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்

Views: - 71

0

0