கூடலூர் பேருந்து நிலையத்தில் கோட்டாட்சியர் ஆய்வு

29 September 2020, 6:30 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி கூடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் சமூக இடைவேளையை பின்பற்றி பயணம் செய்கிறார்களா என்று கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கிராமப் புற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோட்டாட்சியர் என்று பேருந்துகளில் பயணம் செய்கிறவர்கள் சமூக இடைவெளி விட்டு பயம் செய்கிறார்களா, முக கவசம் அணிந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு சானிடைசர் வழங்கப்படுகிறது என்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேருந்து நிலையத்தில் நிற்கும் பயணிகளுக்கு சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தப்பட்ட முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, முக கவசம் அணிவது அவசியம் பற்றிக் கூறப்பட்டது. பின்னர் பேருந்துகளுக்கு கிருமி நாசினிகள் முறையாக தெளிக்கப்படுகிறது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கூடலூர் கோட்டாட்சியர் , வட்டாட்சியர்,காவல்துறையினர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Views: - 9

0

0