தனியார் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

27 August 2020, 7:30 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள்  உயிரிழந்தனர்.

ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிப்பட்டி  கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (17). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக் (21) என்பவரும் நொச்சிப்பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது சின்ன கணக்கம்பட்டி என்ற இடத்தில், எதிரில் வந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் நவீன் மற்றும் ரித்திக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 0

0

0