விலை குறைத்து தராததால் போர்வை வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: மர்மநபர்கள் 3 பேர் வெறிச்செயல்

Author: Udayaraman
11 October 2020, 10:45 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விலை குறைத்து தராததால் கம்பளிபோர்வை மற்றும் வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் காதர்பாட்சா (36). இவர், கிருஷ்ணகிரி டான்சி தொழிற்பேட்டைஅருகே உள்ள பெங்களூர் சாலையில், நடைபாதையில்  கம்பளிபோர்வை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இங்கு வந்த மூன்று நபர்கள் போர்வை விலை கேட்டுள்ளனர். அப்போது பேரம் படியாததால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூவரும் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை காதர்பாட்சா மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிவிட்டனர். 

பலத்த தீக்காயமடைந்த காதர் பாஷா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி நகர போலீசார் வழக்குப்பதிவு, வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தலைமறைவாகி விட்ட மர்ம நபர்கள் மூன்றுபேரை  தேடி வருகின்றனர்.

Views: - 34

0

0