மின்சாரம் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு

Author: kavin kumar
8 August 2021, 5:56 pm
Death_UpdateNews360
Quick Share

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் மின்சாரம் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த இந்திரா என்பவர், தனது பேத்தியை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டின் முன்பாக உள்ள கம்பியில் துணியை காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார கம்பியில் ஈரத்துணி பட்டதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அவர்கள் அலறம் சத்தம் கேட்டு, காப்பாற்ற வந்த இந்திராவின் மகள் மாகாலட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 186

0

0