திடீரென பெய்த ஆலங்கட்டி மழை…. ஆனந்த தாண்டவமாடிய பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
24 June 2021, 1:34 pm
alangatti malai - updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணம் அருகே வடுமாங்குடியில் ஐஸ் கட்டி மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவிடைமருதூர் அருகே வடுமாங்காடி என்னும் கிராமத்தில் மழை பெய்தது. குண்டு குண்டாக மழை பொழிவு ஏற்பட்டதையொட்டி அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்த போது, ஐஸ் கட்டி மழை பெய்தது என தெரியவந்தது. தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக ஐஸ் கட்டி மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Views: - 157

0

0