பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது!

22 November 2020, 2:31 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த பிரபல ரவுடி ஐயனாரை சட்டம் ஒழுங்கு பிரச்சனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் போலீசார் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கணுவாபேட்டை பகுதியை சேர்ந்தவன் தாடி ஐயனார். இவன் மீது 2 கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவனால் வில்லியனூர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அருணுக்கு மேற்குபகுதி எஸ்பி ரங்கநாதன் பரிந்துரை செய்தார்.

இதன் பேரில் ரவுடி தாடி ஐயனாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து தாடி ஐயனாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வில்லியனூர் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 15

0

0