புறநகர் பகுதிகளில் செயல்பட்ட போக்குவரத்து… பாதுகாப்பு பணிகள் போலீசார் குறைவு

23 August 2020, 3:46 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தளர்வில்லா ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த போதிலும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து செயல்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அடுத்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. மேலும் தற்போது இம்மாதம் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இம்மாதத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் எந்த தளர்வு இல்லாத ஊரங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது. திருச்சியில் தளர்வில்லா ஊடங்கு உத்தரவை அடுத்து திருச்சி மாநகர பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால் புறநகர் பகுதியான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை, மற்றும் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சாதாரணமாக வாகனங்களில் போவதே காண முடிந்தது. மேலும் இ-பாஸ் தளர்வு காரணமாக கார்கள் அதிக அளவில் சென்றதையும் காண முடிந்தது. மேலும் போலீசார் பாதுகாப்பு கடந்த நாட்களை விட இந்த இன்று குறைந்த அளவே காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு, மருத்துவமனைகள் மருந்துக்கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

Views: - 1

0

0