வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூர கொலை:போலீசார் விசாரணை….

25 August 2020, 5:35 pm
Quick Share

அரியலூர்; வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூர் வஊசி நகரை சேர்ந்தவர் மலர்கொடி(48). இவரது கணவர் காமராஜ் இறந்து 20 ஆண்டுகளான நிலையில் மகன் கலைவாணனுடன் வாழ்ந்து வந்தார். மகனுக்கு திருமணம் ஆன நிலையில் மனைவியுடன் வாழாமல் அம்மா மலர்கொடி வீட்டில் தங்கி காய்கறி வண்டியில் ஓட்டுனர் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் இரவில் மகன் கலைவாணன் திருச்சிக்கு வண்டி ஓட்டி சென்றுள்ளார்.

தனியாக இருந்த மலர்கொடி காலையில் பிறப்புறுப்பு அறுக்கபட்டு இரத்த வெள்ளத்தில் வீட்டின் முன்புற பகுதியில் பிணமாக கிடந்ததை பார்த்த பக்கத்து வீட்டு பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இது குறித்து மேலப்பழுவூரை சேர்ந்த மாட்டு வியாபாரி சரவணவேல் என்பவரின் மகன் பழனிவேலை போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மலர்கொடி வீட்டில் கறவை மாடுகள் வளர்த்து வந்த நிலையில் மாட்டு வியாபாரி சரவணவேலுக்கும் மலர்கொடிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த சரவணவேலுவின் மகன் இக்கொலையை செய்திருக்கலாமோ என்ற எண்ணததில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 27

0

0