தொடர் மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

Author: Udhayakumar Raman
17 October 2021, 2:53 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், நிலத்தடி தண்ணீர் உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏரிகள் அனைத்தும் வரண்டுப்போனதால் விவசாயிகள் மட்டுமின்றி நிலத்தடி தண்ணீரும் அதளாப்பாதாளத்துக்கு கீழ் சென்றதால் குடிநீர் நின்றி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயமும் பாதிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி, மத்தூர், பாரூர், ஊத்தங்கரை என பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இடிமின்னல்களுடன் பருவமழை பெய்து வருகிறது. மாலை வேளைகளில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் வறண்ட நிலையில் காணப்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் ஏரி, அவதானப்பட்டி ஏரி, திம்மாபுரம் எரி, கரகூர் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரத்தின் காரணமாக நிரப்பி உள்ளது. தொடர்ந்து ஏரிகளுக்கு தண்ணீர் வந்தவண்ணம் இருப்பதால் ஏரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து தண்ணீர் வெளியேறி வருகிறது,கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரிகள் நிரம்பி உள்ளதால் நிலத்தடி தண்ணீரும் உயரும் என்பதால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Views: - 151

0

0