சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது: வேன் மற்றும் 6 பைக்குகள் ரூ.43 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.

17 August 2020, 7:54 pm
Arrest_updateNews360
Quick Share

திருச்சி: லால்குடி அருகே அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தும், அவர்களிடமிருந்து வேன் மற்றும் 6 பைக்குகள், ரூ. 43 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள அய்யன் வாய்க்கால் பகுதியில் ஐயப்பன் தோப்பில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றபோது, சேவல் சன்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், உறையூர் பகுதியைச் சேர்ந்த அசோக், காட்டூரைச் சேர்ந்த செல்வராஜ், லால்குடி மிஷின் சந்து பகுதியைச் சேர்ந்த ஆனந்த், ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த ரூ. 43,310 ரொக்கம், 6 இரு சக்கர வாகனம், ஒரு ஓம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவர் மீதும் உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்கு பதிந்து , காவல்நிலைய பினையில் விடுவித்தனர்.