கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்: பிரபல முன்னாள் சாராய வியாபாரி உள்ளிட்ட 3 பேர் கைது

17 May 2021, 8:51 pm
Quick Share

திருச்சி: லால்குடி அருகே கீழன்பில் கிராமத்தில் மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1087 மதுபாட்டில்களை லால்குடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழன்பில் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி காவல் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து கீழஅன்பில் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டபோது பழைய பிரபல சாராய வியாபாரியான அதே பகுதியைச் சேர்ந்த அப்பாவு மகன் பழனிச்சாமி (53) சுப்ரமணி மகன் முரளி(38),திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த பனையடியான் மகன் கதிரேசன் (24) ஆகியோர் முரளி வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த்தும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 1087 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் போது இவ்வளவு மதுபாட்டில்கள் எப்படி கிடைத்த து என்பது குறித்து லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்,காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் கைதான மூன்று பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 105

0

0