சுவர் இடிந்து வீழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் 11 பேர் காயம்

5 August 2020, 11:06 pm
Quick Share

திருச்சி: லால்குடி பெண்கள் மேனிலைப் பள்ளி எதிரே அமைந்துள்ள வணிக வளாக கட்டடம், மாடி தடுப்பு சுவர் விழுந்ததில் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி பெண்கள் மேனிலைப் பள்ளி எதிரே தனியார் வணிக வளாகம் மாடிக் கட்டத்துடன் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடம், ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற போது அனுகு சாலை அமைத்தனர். அப்போது இந்த வணிக வளாக கட்டடம் முன் பகுதி இடத்தினை அனுகு சாலைக்காக அரசு கையகப்படுத்தி முன் பகுதி கட்டடங்களை இடித்தனர்.

இடித்த கட்டடங்களை சரி செய்த கட்டட உரிமையாளர் தரை தளத்தில் 5 கடைகளும், முதல் தளத்தில் 5 கடைகளும் என நகை அடகு கடை, மெடிக்கல், கிப்ட் கடை, நோட்புக் கடை என 10 கடைகள் இயங்கி வந்தன. கட்டடத்தின் மாடி மேல் பகுதியில் தடுப்பு சுவர் ஹாலோ பிளாக் கல்லில் தரமற்ற முறையில் கட்டியுள்ளனர். தற்போது ஆடி மாதக் காற்று கடுமையாக வீசுவதால், புதன்கிழமை வீசிய கடுமையான காற்றில் தடுப்பு சுவர் முற்றிலுமாக இடிந்து தரையில் விழுந்தது.

இதில் லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாஸ் மகன் வினோத் (10). 5 வகுப்பு மாணவர். அதை பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் சஞ்சய் (12) 7 ம் வகுப்பு மாணவன் ஆகியோர் அவ் வழியாக சைக்கிளில் சென்ற சுவர் விழுந்ததில் இரு சைக்கிள்களும் நொருங்கியது. மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். அதே போல் தனது தாயாருடன் நடந்து வந்த பிளஸ் 2 மாணவி நிஷாந்தி , மருந்தகத்தில் வேலை செய்த கவிதா (24) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த 11 வரும் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இச் சம்பவம் குறித்து கட்ட உரிமையாளர் மீது லால்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 8

0

0