லாரி மோதி 60 வயது மதிக்கதக்க மூதாட்டி தலை நசுங்கி பலி…

Author: kavin kumar
6 November 2021, 5:28 pm
Quick Share

வேலூர்: வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் லாரி மோதி 60 வயது மதிக்கதக்க மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி சித்ரா (வயது 60) இவர்களது மகள் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி நோன்பு பலகாரம் கொடுப்பதற்காக இன்று காலை தர்மபுரியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு பேருந்தில் வந்துள்ளார். அப்போது கிரீன் சர்க்கிள் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆந்திர மாநிலம் பலமநேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காட்பாடி சாலையில் வந்த பால் டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது ஏறி இறங்கியது.

இதில் தலை நசுங்கி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மூதாட்டி இறந்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 572

0

0