அரியலூரில் 41 நடமாடும் ரேஷன் கடைகள் தொடக்கம்

Author: Udayaraman
5 October 2020, 4:33 pm
Quick Share

அரியலூர்; அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 41 நடமாடும் ரேஷன் கடைகளை அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே நியாயவிலை பொருட்களை கொண்டு சென்று வினியோகம் செய்யும் வகையில் நடமாடும் நியாயவிலை கடைகள் அடங்கிய வாகனத்தை அரசு தலைமை கொறடா தாமரை. இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தனர். இதன்மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 41 நகரும் நியாயவிலை கடைகளுக்கான வாகனம் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 345 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 37

0

0