புதிய வகையிலான ஸ்டார்ட் அப் பயிற்சி மையம் துவக்கம்

Author: Udayaraman
15 October 2020, 9:25 pm
Quick Share

கோவை: கோவை இரத்தினம் கல்வி குழுமங்கள் சார்பாக கல்லூரி மாணவர்களின் தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் விதமாக புதிய வகையிலான ஸ்டார்ட் அப் பயிற்சி மையம் துவங்கப்பட்டது.

மாணவர்களின் தொழில் சார்ந்த திறன்களை வளர்க்கும் விதமான இரத்தினம் ஸ்டார்ட் அப் ஸ்கூல் துவக்க விழா இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இணைய வழியாக நடைபெற்ற இதில் இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்,தற்போதைய கல்லூரி மாணவ,மாணவிகளின் வழக்கமான பாடங்கள் தவிர்த்து அவர்களின் தனி திறன்களை வெளிகொணர்வது,அதனை தொழில் சார்ந்த அறிவுகளாக மாற்றி அந்த மாணவர்களையே தொழில் முனைவோர்களாகவும், அதில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான திறன்களை இந்த பயிற்சி வகுப்பில் அளிக்க உள்ளதாகவும்,

மேலும் மாணவர்களின் தனித்திறமைகளுக்கு ஏற்றவாறு அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு பகுப்பாய்வுத் திறன். நினைவாற்றல், தொழில் சார்ந்த நுண்ணறிவு,புதிய கண்டுபிடிப்புகளுக்கு தீர்வு காணுதல், கவனக்குவிப்பு, போன்ற பயிற்சிகளை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக இதன் துவக்க விழாவில்,ஜோஹோ கற்றல் பள்ளிகளின் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி ரத்தினம் ஸ்டார்ட்அப் பள்ளியை துவக்கி வைத்து பேசினார்., இணைய வழியாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மனநிலை எனும் தலைப்பில் பேசிய அவர், மாணவர்கள் தன்னிடமிருந்து ஒரு வாய்ப்பைத் தேட வேண்டும், ஆனால் வெளி உலகில் அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.

Views: - 49

0

0