ஊருக்கு ஒரு குளம் திட்டத்தின்கீழ் புது குளங்கள் உருவாக்கும் திட்டம் தொடக்கம்…

10 August 2020, 4:27 pm
Quick Share

ஈரோடு: ஊருக்கு ஒரு குளம் திட்டத்தின்கீழ் புது குளங்கள் உருவாக்கும் திட்டம் ஈரோட்டில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் துவங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் தென்முகம் வெள்ளோடு சிருவங்காட்டுவலசு எனும் கிராமத்தில் தூர்ந்து போன நிலையில், யாருக்கும் பயனற்று நீர்த்தேக்கம் இன்றி இருந்த குளத்தை ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் குளத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி குலத்திற்கு நீர்வரும் பாதைகளை சரிசெய்து குளத்தில் நீர் தேக்கம் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கான பூமி பூஜை இன்று ஈரோட்டில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் மற்றும் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சின்னசாமி, நீர் மேலாண்மை குழு தலைவர் ராபின், செயலாளர் இளங்கோவன் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் தலைவர் சின்னசாமி, தற்போது தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது போன்ற பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல் பொது மக்கள் தொண்டு நிறுவனங்கள் சமூக அமைப்பினர் என அனைவரும் பங்களிப்புடன் சேர்ந்து செய்வதன் மூலம் பணி எளிதில் முடிவடையும். இதனை கருத்தில் கொண்டு எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் நீர்நிலை பாதுகாத்தல் நீர்நிலைகளில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இதுவரை 45 குளம், குட்டை, ஏரி , ஓடை, கால்வாய் மற்றும் தடுப்பணை போன்ற நீர்நிலைகளை சுத்தம் செய்தும், தூர்வாரி ஆழப்படுத்த நீர் சேமிக்க வழி செய்துள்ளோம், அதன் தொடர்ச்சியாக இது 46வது நீர் நிலை மேம்பாடு ஆகும் இதற்கு அரசிடம் முறையாக அனுமதி பெற்று செய்யப்படுகின்றது. இதற்கு தேவையான நிதிகள் எங்களது பங்களிப்பு மட்டுமின்றி இந்த ஊர் பொது மக்களின் பங்களிப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

Views: - 6

0

0