கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து அறிந்து கொள்ள தனி இணையதளம் தொடக்கம்…

25 August 2020, 9:33 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்வதற்கென www.gdmch.in என்ற தனி இணையதளத்தினை மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்வதற்கென www.gdmch.in என்ற தனி இணையதளத்தினை மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை கால தாமதமின்றி 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள பல்வேறு கட்டமைப்புகள் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டு வந்த நிலையில் கொரோனா பரிசோதனை குறித்த முடிவுகளை பதிவு இறக்கம் செய்யும் வகையில் இதற்கென www.gdmch.in என்ற தனி இணையதளம் தொடங்கி வைக்கப்படுகிறது. இது போன்று பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும், சளி மாதிரியை உடனடியாக பரிசோதித்து முடிவுகளை தெரிவிப்பதாலும் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தை சேர்நதவர்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் அதிகம். தருமபுரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பணிபுரிய செல்பவர்களின் வசதிக்காக அவர்களின் கொரானா பரிசோதனை முடிவுகள் இணையதளத்தில் வெளியிட தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் எப்பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய கொரோனா பரிசோதனை முடிவை மொபைல் எண்ணை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்படும் இடங்களில் இந்த சான்றிதழை காண்பிக்கலாம்.

இந்த சான்றிதழை பெற இங்குமங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. என்றும், தருமபுரி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முறைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால் தருமபுரி மாவட்டத்தில் 95 வயது முதியவர் பூரண குணடமடைந்து வீடு திரும்பி உள்ளார். கொரானா பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் 201 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 11 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பூ.இரா.ஜெமினி, அரசு மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவகல்லூரி முதல்வர் மருத்துவர் இளங்கோவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 34

0

0