திண்டுக்கல்லில் காவல்துறை சார்பில் E-BEAT மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

Author: kavin kumar
30 September 2021, 3:57 pm
Quick Share

திண்டுக்கல்: தமிழகத்திலேயே முதல் முறையாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் E-BEAT மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரோந்து பணியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ஈடுபடும் பீட் காவலர்கள் அவர்கள் பணிபுரியும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஏதாவது ஒரு வணிக நிறுவனம், தொழிற்சாலைகள், புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டா புத்தகம் என்ற புத்தகம் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் புத்தகத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள், தேதி, ஆய்வுக்கு சென்ற நேரம், உள்ளிட்ட விபரங்களை குறித்து வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்த பட்டா புத்தகத்தினை சார்பு ஆய்வாளர் ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்விற்கு செல்லும்போது சோதனை செய்வது வழக்கம். இதற்கிடையே இன்று தமிழகத்தில் முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக E- BEAT என்னும் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள் இந்த அப்ளிகேஷனில் உள்ள Q – R கோடூனை ஸ்கேன் செய்தால் சம்பந்தப்பட்ட காவலர் ரோந்து பணிக்கு சென்ற நேரம் தேதி உள்ளிட்ட விபரங்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விடும். முதற்கட்டமாக திண்டுக்கல் நகரில் உட் கோட்டத்தில் 129 இடங்களிலும் திண்டுக்கல் புறநகர் 312 இடங்களிலும் மொத்தம் 441 இடங்களில் பீட் ஸ்கேன்கள் ஒட்டப்பட்டுள்ளது விரைவில் மாவட்டம் முழுவதும் 1508 இடங்களில் க்யூ ஆர் ஸ்கேனர் ஒட்டப்பட்ட உள்ளது. இந்நிகழ்ச்சியில் ADSP லாவண்யா, நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 169

0

0