தொற்று நோய்களை தடுப்பதற்கான நடமாடும் மருத்துவ சேவை தொடக்கம்

29 November 2020, 2:28 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொற்று நோய்களை தடுப்பதற்கான நடமாடும் மருத்துவ சேவையினை அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்.

மழைகாலங்களில் பரவும் தொற்று நோய்களை தடுப்பதற்கான நடமாடும் மருத்துவ சேவையினை அரசு தலைமை கொறடா தாமரை. இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தனர். இதில் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 201 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகள், அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்த நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்கள் செயல்பட உள்ளன. மேலும் வடகிழக்கு பருவமழை தாக்கத்தின் காரணமாகவும்,

மேலும் தொற்றுநோய் அதிகமாக பரவ வாயப்பு உள்ளதால் நோய் தொற்று பரவாமல் தடுக்க கரூர் மாவட்ட சுகாதாரதுறை மூலம் 3 மருத்துவ குழுக்களும், ஈரோடு மாவட்டத்திலிருந்து நோய் பரப்பிகள் கட்டுபடுத்தும் குழுக்களும் இணைந்து இந்த மழைக்கால மருத்துவ முகாமில் ஈடுபட உள்ளனர். மேலும் இக்குழுவினருடன் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 நடமாடும் மருத்துவ குழுக்களும், 12 பள்ளி மருத்துவகுழு மற்றும் நகராட்சி, பேரூராட்சிக்கு சொந்தமான கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள் உள்ளிட்ட 25 வானங்கள் இப்பணியில் ஈடுபடவுள்ளனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதாரதுறை துணை இயக்குனர், அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 14

0

0