கோவையில் கண்காணிப்பு கேமராக்களின் சேவை துவக்கம்

13 January 2021, 10:21 pm
Quick Share

கோவை: கோவை ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் சேவையை காவல் ஆணையர் சுமித் சரண் துவக்கி வைத்தார்.

குற்ற செயல்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளில் கோவை மாநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாநகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை பந்தய சாலை எல்லைக்குட்பட்ட உப்பிளிபாளையம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு குழு ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமிக்கு காவல்ஆணையர் நினைவுப் பரிசு வழங்கினார் .துணை ஆணையர்கள் ஸ்டாலின் மற்றும் உமா ,குணசேகரன் உள்பட காவல் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர். பந்தய சாலை காவல் ஆய்வாளர் சக்திவேல் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

Views: - 4

0

0