டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் வழங்கினால் தலைமை பரிசீலிக்கும்: கே.பி.முனுசாமி பேட்டி

31 January 2021, 6:43 pm
Quick Share

கிருஷ்ணகிரி: டிடிவி தினகரன் தனது தவறை ஒப்புக்கொண்டு மீண்டும் அதிமுகவில் இணைய மன்னிப்பு கடிதம் வழங்கினால் தலைமை அந்த கடிதத்தின் மீது பரிசீலிக்கும் என கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆனார் பின்னர் குரானா காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வருகிறார். இது சம்பந்தமாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது,

அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை உருவாக்கி செயற்க்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான் மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறுக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்தார். சசிகலாவை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த கேபி முனுசாமி,

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்து அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும் எனவும், அதிமுக அமுமுக இணைக்கபடுமா என்கிற கேள்விக்கு, அதற்கு டிடிவி தினகரன் தனிப்பட்ட ஒருவர் அரசியல் செய்வதற்காக துவங்கப்பட்ட கட்சி, அப்படி பட்ட ஓரு கட்சியுடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை, வேண்டும் என்றால் டிடிவி அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஓப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை அதிமுகவில் இணைக்ககோரினால், அதற்கு அதிமுக தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Views: - 0

0

0