மனு கொடுக்க வருபவர்கள் தற்கொலை முயற்சி ஈடுபட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் விசாகன் எச்சரிக்கை

Author: kavin kumar
23 August 2021, 5:28 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் தற்கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகம் உள்ளது இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கை மற்றும் கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை முறையில் கை கால்கள் பாதிப்புக்கு ஏற்றவாறு அளவிடும் பணியை தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் விசாகன் துவக்கி வைத்தார் முகாமிற்கு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல் பழனி வேடசந்தூர் நத்தம் கொடைக்கானல் போன்ற பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறும்பொழுது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கை கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் தற்போது செயற்கை கை கால்கள் வழங்குவதற்காக அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்தவுடன் இவர்களுக்கு ஒரு சில மாதங்களில் செயற்கை கால்கள் பொருத்தப்படும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 400 பேர் வரை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர் தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். கண்டிப்பாக 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைவார்கள் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் பொழுது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப் படுத்தியே மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் கேனுடன் வருகின்றனர். இவர்கள் மீது ஏற்கனவே போலீசார் மூலம் FIR போட்டு வருகிறோம். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சாதாரண சொத்து பிரச்சனை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் தங்களது பிரச்சினையை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என்றார்.

Views: - 187

0

0